ஊத்துக்கோட்டை பகுதி அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் வீடு வீடாக விற்பனை செய்யப்படுகிறது. இது அப்பகுதி பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள பல அரசு பள்ளிகளில் ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 15 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 1600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியில் சத்துணவு சாப்பிடுகின்றனர்.
ஊத்துக்கோட்டை ரெட்டி தெரு, செட்டி தெரு, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, நாகலாபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுக்காக வழங்கப்படும் முட்டைகள் விற்கப்படுகின்றன. அரசின் முத்திரை பதித்த முட்டையை வெளியாட்கள் மூலம் க்ஷீ2.50க்கு வீடு வீடாக சென்றும் விற்கின்றனர். இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment