தமிழகத்தில் 1.90 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் கார்டுகள் கடந்த 2005ம் ஆண்டு வழங்கப்பட்டன. இவற்றின் ஆயுள் காலம் 2009ம் ஆண்டு நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளுக்கு ரேஷன் கார்டுகள் புதுப்பித்து வழங்கப்பட்டன.எனினும் எந்த பொருளும் வேண்டாதவர்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளை நிற ரேஷன் கார்டு, தட்கல் முறையில் முகவரி ஆதாரத்திற்காக வழங்கப்பட்ட மஞ்சள் நிற ரேஷன் கார்டு ஆகியவை புதுப்பிக்கப்படவில்லை. இதனால் அந்த ரேஷன் கார்டுகளை முகவரிக்காக சமர்ப்பிக்கும் போது காலாவதியாகிவிட்டதாக கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு வெள்ளை, மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளை 2013, 2014ம் ஆண்டுகளுக்கு 210.212.62.90:8080/newfcp/cardvalidity.do என்ற இணையதளம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இந்த இணையதள பக்கத்தில் ரேஷன் கார்டுகளின் எண்ணை பதிவு செய்தால் கால நீட்டிப்பு செய்ததற்கான பதிவுச் சான்று வரும். அதை ரேஷன் கார்டுகளில் ஒட்டி பராமரித்துக் கொள்ளலாம் என அரசு கூறியுள்ளது.இதுகுறித்து நெல்லை கலெக்டர் கருணாகரன் கூறுகையில்,இணையதள வசதியை பயன்படுத்த இயலாத ரேஷன் கார்டுதாரர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மாதம் தோறும் நடத்தும் பொது விநியோக திட்ட குறை தீர் கூட்டத்தில் தங்கள் ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த வசதி அடுத்த ஆண்டு ஜன.31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment