தூத்துக்குடியில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு வழிப்பறி நாயகன் விருது வழங்க போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போஸ்டர் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்ததை விட பல மடங்கு கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. டிஜிட்டல் பேனர்களும் வைத்துள்ளனர். மாவட்டத்தில் கல்வி கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் முதல் 10 பள்ளிகளுக்கு வழிப்பறி நாயகன் விருது வழங்க உள்ளதாகவும், இந்த கல்வி கட்டண கொள்ளையை தடுக்க தவறிய மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்கள் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில பள்ளிகள் அருகே வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்களை பள்ளி நிர்வாகத்தினரே அகற்றினர். பல இடங்களில் இந்த போஸ்டர்கள் இரவோடு இரவாக கிழிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகும் கல்வித்துறை தகுந்த நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment