ஒவ்வொரு பள்ளியிலும் 25 சதவீத நலிவடைந்த பிரிவு மாணவ மாணவியர் சேர்க்கை 100 சதவீதம் நடைபெற்றுள்ளது என்பதை உறுதி செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:
* ஒவ்வொரு தனியார் சுயநிதி பள்ளியிலும் எல்கேஜி, முதல் வகுப்பு, 6ம் வகுப்பு ஆகியவற்றில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும். அதன் அடிப்படையில் 25% இடங்கள் கணக்கிடப்பட வேண்டும்.
* வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடு சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என்றாலும் அந்த பள்ளிகளிலும் நுழைவுநிலை வகுப்புகள் எண்ணிக்கை, மாணவர் சேர்க்கை விபரங்களை சேகரித்து இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment