பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு, வரும், 21ம் தேதி, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது. எட்டு லட்சம் மாணவ, மாணவியர் ஆவலுடன் எதிர்பார்த்த, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் காலை வெளியானது. இவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், வரும் 21ம் தேதி முதல், அவரவர் படித்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது.
அன்று காலை முதல், வேலை வாய்ப்பு அலுவலக பதிவும் அந்தந்த பள்ளிகளிலேயே நடக்கும் என்று தேர்வு துறை அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment