Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 17 May 2014

பிளஸ் 2 மாணவர்களுக்கு 21ம் தேதி மதிப்பெண் பட்டியல் வழங்க ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிழை இல்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க கல்வித் துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு தேர்வுத்துறை மூலம் வழங்கப்படும் மதிப்பெண்கள் பட்டியல்களில் சில பிழைகள் ஏற்படும் போது, அவற்றை சரி செய்ய விண்ணப்பித்து திருத்திய மதிப்பெண் பட்டியல் பெற காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், மேல் படிப்பில் சேரும் மாவணர்களுக்கு சிரமம் ஏற்பட்டது வந்தது. இதனைப் போக்க அரசு, முதன்முறையாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைவாக மதிப்பெண் பட்டியல்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறை இருந்தால் உடன் பிழைகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்டால், உடன் பிழை திருத்தி; பிழை இல்லா மதிப்பெண் பட்டியலை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 185 பள்ளிகளுக்கான மதிப்பெண் பட்டியல் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 17ம் தேதி வழங்கப்பட உள்ளது. பள்ளியில் அனைத்து மதிப்பெண் பட்டியல்களில் பெயர், பிறந்த தேதி, மதிப்பெண், தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்து சரி பார்த்து, பிழை இருந்தால் அவற்றை குறித்து 19ம் தேதி மதியம் 1:00 மணிக்குள் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலத்திற்கு அனுப்ப வேண்டும். பிழை உள்ள மதிப்பெண் பட்டியல் தேர்வுத் துறைக்கு அனுப்பட்டு பிழையில்லாத மதிப்பெண்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, மதிப்பெண் 20ம் தேதி மதியம் அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விடும். இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் வரும் 21ம் தேதி காலை 9:00 மணி முதல் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

No comments:

Post a Comment