கடலூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் 3ம் தேதி முதல், அதே மாதம் 25ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வு நடந்தது. கடலூர் மற்றும் விருத்தாசலம் என, இரண்டு கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 187 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 29 ஆயிரத்து 150 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்காக, கடலூர் கல்வி மாவட்டத்தில், 49 மையங்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 27 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, விடைத்தாள்கள் திருத்தும் பணியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நாளை (9ம் தேதி) வெளியிட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. காலை 10:00 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில், தேர்வு முடிவுகள் வெளியிட ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இணையதளம், மொபைல் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment