Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 19 May 2014

கீழ் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி பிளஸ் 2 தோல்விக்கு காரணம்; முதுநிலை ஆசிரியர் சங்கம் கண்டனம்


கீழ் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி பெற வைப்பதால்தான், மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியில், குறைந்த சதவீதத்தை அடைகின்றனர். இதற்கு தலைமை ஆசிரியர்களை மட்டும் குறை கூறுவதை ஏற்க முடியாது, என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பிளஸ் 2 பொது தேர்வில், 95.14 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 6-வது இடம் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு தேர்ச்சியை விட, 1.11 சதவீதம் அதிகம். ஆனால், தேர்ச்சி அளவு 80 சதவீதத்துக்கு குறைவாக உள்ள மூன்று பள்ளிகளின், தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதை பல்வேறு ஆசிரியர் அமைப்புகளும், கண்டித்து வருகின்றன. இதற்கு மாணவர்களும் ஒரு காரணம், தலைமை ஆசிரியர்களை மட்டும் குறை கூறுவதில் நியாயமில்லை என ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: தேர்ச்சி விகிதம் குறைய ஆசிரியர்கள் மட்டுமே காரணம் அல்ல. பல அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பு, வசதியின்மை, கீழ் வகுப்புகளில் கட்டாய முழு தேர்ச்சி, தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க கூட முடியாத சூழ்நிலை, மாணவர்களை நெறி படுத்துவதற்கான நல்லொழுக்க வகுப்புகளுக்கு, முக்கியத்துவம் கொடுக்காத நிலை, ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகின்ற இதர பல பணிகள் போன்றவைதான்.

இவைகளை கருத்தில் கொள்ளாமல், ஆசிரியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்ததை, தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லையேல், தோழமை அமைப்புகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.

No comments:

Post a Comment