லோக்சபா தேர்தலில், ஈரோடு மாவட்டத்தில், 10.04 லட்சம் ஓட்டு பதிவாகி உள்ள நிலையில், தபால் ஓட்டு போடும் அரசு ஊழியர்கள், 50 சதவீதம் பேர், ஓட்டு போட முன் வரவில்லை. ஈரோடு லோக்சபா தொகுதியில், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கேயம், தாராபுரம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட்டோருக்கு, மூன்றாம் கட்ட பயிற்சியின்போதே, தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. தகுதியானவர்கள், பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள், ஒரே சட்டசபை தொகுதியில் பணியாற்றும்போது, தேர்தல் நடத்தும் அலுவலரிடம், சான்று பெற்று, அங்கேயே ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். இருந்தும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4,521 ஓட்டுகளில் இதுவரை, 1,910 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி இருக்கின்றன. பாதிக்கும் குறைவாக உள்ளதால், அதிகாரிகள் குழப்பமடைந்திருக்கின்றனர்.
இதுபற்றி, ஈரோடு கலெக்டர் மதுமதி கூறியதாவது: தபால் ஓட்டு போடுவதற்கு, கடந்த மாதம், 23ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்பட்டது. விண்ணப்பம் பெற்றவர்கள், மே, 16ம் தேதி வரை தபால் ஓட்டு போட முடியும். அதனால், தபால் ஓட்டு பதிவு குறைந்துள்ளது என, கூற முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment