கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு இன்று (மே 5 - திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட (NMMS) தேர்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவு மே 5-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இணையதளம் www.tndge.in மூலம் அறிந்துகொள்ளலாம்.
8-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு திறனாய்வுத் தேர்வை தமிழகத்தில் 1.47 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில் வெற்றிபெறும் 6,695 பேருக்கு பிளஸ் 2 வரை கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment