Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 7 May 2014

மாதிரி பள்ளிகளுக்கு மே 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாதிரி பள்ளிகளுக்கு மே 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டு கல்வியில் மிகவும் பின்தங்கிய வட்டாரங்களில் மாதிரிப்பள்ளிகள் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக திருக்கோவிலூர் (ஜி.அரியூர்) மாதிரிப் பள்ளி, ரிஷிவந்தியம் (சித்தால்) மாதிரிப் பள்ளி, தியாகதுருகம்(விருகாவூர்) மாதிரிப் பள்ளி, கள்ளக்குறிச்சி(பெரியசிறுவத்தூர்) மாதிரிப் பள்ளி ஆகிய 4 பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேற்காணும் மாதிரிப் பள்ளிகளுக்காக 2014-15-ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. 6-ம் வகுப்பு (ஆங்கில வழி) 9-ம் வகுப்பு (ஆங்கில வழி) மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் அந்தந்த மதிரிப் பள்ளிகளில் மே 9-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. அந்தந்த பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் மாதிரிப் பள்ளிகளில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாதிரிப் பள்ளியில் மே 23-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
சங்கராபுரம், புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி, திருக்கோவிலூர் களமருதூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் ஏமப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் தற்காலிகமாக இயங்கும் மாதிரிப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.
மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் அந்தந்த மாதிரிப் பள்ளிகளில் மே 9-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. அந்தந்த பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் மாதிரிப் பள்ளிகளில் இருந்து விண்ணப்பங்களை மே 23-ம் தேதிக்குள் அந்தந்த மாதிரிப் பள்ளிகளில் வழங்கலாம்.
விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ள தேதி: மே 9-ம் தேதி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருப்பி அனுப்பும் தேதி மே 23. இது தொடர்பாக தொடர்பு கொள்ள விரும்பும் பெற்றோர்கள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள மாதிரிப் பள்ளி தலைமை ஆசிரியரை சந்திக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment