Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 10 May 2014

செல்லாத ஓட்டாகிறது தபால் ஓட்டு நகல்


தேர்தல் கமிஷன் வழங்கிய தபால் ஓட்டு சீட்டுக்கு பதிலாக, நகல் அனுப்பினால், அந்த ஓட்டு, செல்லாத ஓட்டாக கணக்கிடப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: தபால் ஓட்டு போடுவோர், தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள ஓட்டு சீட்டில், தங்கள் ஓட்டை பதிவு செய்ய வேண்டும். அதற்கு பதில், நகல் அனுப்பினால், அது ஏற்றுக் கொள்ளப்படாது.
இரண்டு சின்னங்களில், "டிக்' செய்திருந்தால், செல்லாத ஓட்டாக அறிவிக்கப்படும். தேர்தல் கமிஷன் அனுப்பிய ஓட்டு சீட்டில் உள்ள வரிசை எண்ணும், பணி சான்றிதழில் உள்ள வரிசை எண்ணும், ஒன்றாக இருக்க வேண்டும். தபால் ஓட்டு அனுப்புவோர், அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு, தபால் உறை மீது கையெழுத்திடாமல் இருந்தாலும், அந்த ஓட்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் முறையாக நிரப்பப்பட்டிருந்தால் மட்டுமே, அந்த ஓட்டு செல்லத்தக்கதாக ஏற்றுக் கொள்ளப்படும். தபால் ஓட்டு, 16ம் தேதி காலை, 8:00 மணிக்குள் வந்தடைய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment