Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 11 May 2014

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு: முதலமைச்சரின் நடவடிக்‍கைக்‍கு பாராட்டு


முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கல்வித்துறையில் மாணவர்களின் சிரமங்களைக்‍ குறைக்‍கும் வகையில் பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி, மதிப்பெண் சான்றிதழ்கள் பெறும்போது பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவும் செய்வதற்கு முதலமைச்சர்
செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 21-ம் தேதி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளில் பெற்றுக்‍கொள்ளும்போது, வேலைவாய்ப்பு பதிவையும் அங்கேயே செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் குடும்ப அட்டை மற்றும் 10-ம் வகுப்பு வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றை கொண்டுவரவேண்டும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

மேலும், மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்கோரி மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு செல்லாமல், பள்ளிகளிலேயே இவற்றை வழங்கவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில் நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த நடவடிக்‍கைக்‍கு மாணவர்களின் பெற்றோர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment