Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 6 May 2014

தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவரும் தபால் ஓட்டுக்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்


திருப்பூர் லோக்சபா தொகுதியில், தேர்தல் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் போலீசார் என மொத்தம் 5,100 பேருக்கு தபால் ஓட்டுக்கான "பேலட் ஷீட்' வழங்கப்பட்டது. நேற்று வரை, 1,520 பேரே, தபால் ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர். அனைவரும் தவறாமல் ஓட்டுக்களை பதிவு செய்ய வேண்டுமென, தேர்தல் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில் ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லூரியில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. கல்லூரி வளாகம், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பில் உள்ளது. தனி தாசில்தார் நிலையிலான கண்காணிப்பு அதிகாரிகளும், வேட்பாளர் பிரதிநிதிகளும், மூன்று "ஷிப்ட்' முறையில் கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் வடக்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர் மற்றும் கோபி தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள், தலா 14 டேபிள்களிலும், திருப்பூர் தெற்கு தொகுதியில் மட்டும் 10 டேபிள்களிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கண்காணிப்பாளர், "மைக்ரோ அப்சர்வர்' மற்றும் உதவியாளர் என ஒரு டேபிளுக்கு மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கை மையத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், நான்கு பேர் கொண்ட குழு கண்காணிப்பு பணி மேற்கொள்ளும். மொத்தமுள்ள ஓட்டுச்சாவடிகள் அடிப்படையில், 22 சுற்றுக்கள் வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற வாய்ப்புள் ளது. ஒவ்வொரு டேபிளுக்கும், வேட்பாளர் ஏஜன்டுகள் நியமிக்கப்பட உள்ளனர். சட்டசபை தொகுதி வாரியாக, வேட்பாளரின் தலைமை ஏஜன்டுகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வழங்கும் படிவம்-18 மூலமாக, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 16 ஏஜன்டுகள் நிய
மிக்கப்பட உள்ளனர். ஏஜன்டுகளுக்கு, அடையாள அட்டை மற்றும் "பாஸ்' உள்ளிட்டவை, வரும் 12ம் தேதி மாலைக்குள் வழங்கப்படும்.
தபால் ஓட்டு பதிய ஆர்வமில்லையா? : திருப்பூர் லோக்சபா தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், போலீசார் உட்பட 5,100 பேர் தபால் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, ஓட்டுப்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது. தபால் ஓட்டுக்களை பெற்ற, மற்ற ஊழியர்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பெட்டியில் போடலாம். தபால் மூலமாகவும், தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வார நிலவரப்படி, 1,404 தபால் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. நேற்று 116 பேர், தபால் ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர். மொத்தம் 5,100 தபால் ஓட்டுக்கள் உள்ள நிலையில், நேற்று வரை 1,520 பேரே பதிவு செய்துள்ளனர். தபால் ஓட்டுக்களை, வரும் 16ம் தேதி காலை 8.00 மணி வரை பதிவு செய்து பெட்டியில் போடலாம். அன்றைய தினம் காலை 8.00 மணிக்கு, கலெக்டர் அறையில் உள்ள ஓட்டுப்பெட்டி, ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும். போதுமான அவகாசம் இருப்பதால், "பேலட் சீட்' பெற்ற அனைவரும், தவறாமல் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டுமென, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரும் 16ம் தேதி காலை 8.00 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப் படும். அதைத்தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு மெஷின்களில் பதிவாகியுள்ள ஓட்டுக்கள் எண்ணப்படும். இப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டதும், இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்படும்.
"மைக்ரோ அப்சர்வர்'களுக்கு தனியாக இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கும். ஓட்டுஎண்ணிக்கை அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் ஏஜன்டுகள் போதுமான அளவு "ரிசர்வ்' வைக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு சுற்று முடிந்ததும், கட்சி ஏஜன்டுகளுக்கு முடிவு அறிவிக்கப்படும். இம் முறை, ஒவ்வொரு டேபிளுக்கும், பதிவான ஓட்டு விவரங்கள் 
அறிக்கையாக வழங்கி, கையொப்பம் பெறப்பட உள்ளது, என்றனர்.

No comments:

Post a Comment