Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 1 May 2014

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை... : பள்ளிக் கல்வித் துறை தீவிர நடவடிக்கை


அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு, வண்ணச் சீருடைகள் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
மாநிலம் முழுவதும் அமைந்துள்ள, புதுச்சேரி அரசு பள்ளிகளில், ஒரு லட்சம் மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான சீருடைகளை, பள்ளிக் கல்வித்துறை இலவசமாக வழங்கி வருகிறது.
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடை, பச்சை-வெள்ளை, காக்கி - வெள்ளை, நீலம்-வெள்ளை என டல்லடிக்கும் வண்ணங்களில், ஒரே மாதிரியாக இருப்பது சலிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், தனியார் பள்ளிகள் தங்களது சீருடையை அடிக்கடி மாற்றுகின்றன.
தனியார் பள்ளிகளில் வண்ண மயமான பளீச் சீருடைகளை அணிவதால், மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது.
எனவே, ஒரே மாதிரியான சீருடைக்கு விடை கொடுத்துவிட்டு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வண்ணமயமான சீருடைகளை வழங்க, பள்ளிக் கல்வி இயக்குனர் வல்லவன் தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மூன்று விதமான சீருடைகளை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இருந்து, ஐந்தாம் வகுப்பு வரை, படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பச்சை நிற டிரவுசர், ஸ்கர்ட் மற்றும் வெள்ளையில், இளம்பச்சை மற்றும் மஞ்சள் கோடுகள் போட்ட சட்டை வழங்கப்பட உள்ளது.
ஆறாம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரை, படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, க்ரே வண்ணத்தில் டிரவுசர், ஸ்கர்ட் மற்றும் வெள்ளையில், க்ரே வண்ண கோடுகள் போட்ட சட்டை வினியோகிக்கப்பட உள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, நீல வண்ணம், வெள்ளையில் நீல கோடுகள் போட்ட சீருடை வழங்கப்பட உள்ளது.
சீருடைகளை சப்ளை செய்வதற்கு, 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர், ஏ.எப்.டி., மில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சீருடைகளை தயார் செய்யும் பணியில், ஏ.எப்.டி., நிர்வாகம் முழு வீச்சில் இறங்கி உள்ளது.
தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ள ஏ.எப்.டி., மில்லின் யூனிட்டுகளில், சீருடைகளை தைக்கும் பணிகள் வேக வேகமாக நடந்து வருகிறது.
கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டவுடன், சீருடைகள் வழங்கப்படும் என, ஏ.எப்.டி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment