காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கக் கூட்டம் சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்டத் தலைவர் எம்.மோகன்குமார் தலைமை வகித்தார். ஆசிரியை கே.நிம்மி முன்னிலை வகித்தார். ஜி.சங்கீதா வரவேற்றார். ஆசிரியர் ஞானசேகரன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்: நிரந்தரப்பணியில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கணினி ஆசிரியர்களுக்கு தகுதிகாண்பருவம், பணிவிதிகள் வெளியிடக் கோருதல், காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை கொண்டு நிரப்பக் கோருதல், பள்ளிகளில் கணினி சார்ந்த பணிகள், விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வதுடன், குறுகிய காலத்தில் இணையதளம் மூலம் இடைநிற்றல் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவிறக்கம் செய்ய நிர்பந்திப்பதால் கற்பித்தல் பணி பாதிப்படைவதை தவிர்க்க கோருதல், கோடை விடுமுறை காலங்களிலும், வாரவிடுமுறை காலங்களிலும் பணிகளை மேற்கொள்ள நிர்பந்திப்பதால் கணினி ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களும், மனஉளைச்சலுக்கும் ஆளாக்கப்படுவதை தவிர்க்க கோருதல்.
No comments:
Post a Comment