பள்ளிகளில் மாணவர்கள் எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை பெற் றோர்கள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசாங்கம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.தாய்மொழி கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த உத்தரவுப் பொருந்தும் என்றும், அரசுப் பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் கூறியிருக்கிறது.சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தொடக்கப் பள்ளிக்கல்வித் திட்டதில் தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில், அனைத்து சிறு பான்மை கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழி பாடம் கட்டாயமாக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது.மாநில அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசி யல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ஆரம்பப் பள்ளிகளில் தாய்மொழி பாடத்தை திணிப்பது என்பது குடிமக்களின் உரிமையை மீறுவதாகும் என்று கூறி கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்தது.
No comments:
Post a Comment