Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 6 May 2014

மாணவர்களுக்கு விலையில்லா திட்டங்கள் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க சி.இ.ஓ. உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அரசின் விலையில்லா பொருட்கள் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென" சி.இ.ஓ., மகேஸ்வரி உத்தரவிட்டார்.
தர்மபுரி சி.இ.ஓ. அலுவலக வளாகத்தில் 2014-2015ம் கல்வியாண்டில் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் குறித்தும், தர்மபுரி சி.இ.ஓ. மகேஸ்வரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சி.இ.ஓ.வின் நேர்முக உதவியாளர் (உயர்நிலைப்பள்ளி) சுப்பிரமணி வரவேற்றார். டி.இ.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தனர்.
சி.இ.ஓ., மகேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 210 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், தங்கள் பள்ளியில் 2014-2015ம் கல்வியாண்டில் புதிதாக ஆங்கில வழிக் கல்வி துவங்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியானவுடன், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு அட்டை பெற்று, வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் பெற்ற பின், வகுப்புகளை பிரித்து கால அட்டவணை தயாரித்து வைக்க வேண்டும். விலையில்லா திட்டங்களை உரிய காலத்துக்குள் செயல்படுத்த ஆசிரியர் குழுக்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, தேர்ச்சி அறிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி துவங்கிய பின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு, அரசின் உதவிகளை பெற வங்கி கணக்கு துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்றக் கூட்டங்கள், கல்வி இணைச் செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த குழுக்கள் அமைக்க வேண்டும். ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் நேரடியாக சேரும் மாணவர்களுக்கு இணைப்பு பயிற்சி வழங்க வேண்டும்.
சத்துணவு மேற்பார்வை, பஸ்களில் விபத்து இல்லாமல் மாணவர்கள் பயணம் செய்வதை கண்காணிக்க ஆசிரியர்கள் குழுக்கள் அமைக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து, மாணவர்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும். பள்ளிக்கு சரியாக வராத மாணவர்களை கண்காணித்து, அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். மெல்ல கற்கும் மாணவர்கள் சிறந்த முறையில் படிக்க தேவையான திட்டங்களை தயாரிக்க வேண்டும், என்றார்.
இதில், பள்ளி கல்வித்துறை துணை ஆய்வாளர் சீனிவாசன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment