ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை வழங்க தாமதப்படுத்தி வரும் உதவி தொடக்க கல்வி அலுவலக கிளார்க் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போடி உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
போடி உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் கிளார்க்காக பணி புரிபவர் பாலசுப்பிரமணி. இவர், போடி உதவி தொடக்க கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் இயங்கும், உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், அகவிலைப்படி, நிலுவைத் தொகை உள்ளிட்டவைகள் வழங்க காலதாமதம் ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
இது குறித்து ஆசிரியர்கள் கேட்பதற்கு முறையான பதில் சொல்வதில்லை எனக் கூறி, சம்பந்தப்பட்ட கிளார்க் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், தலைவர் சீனிவாசன் தலைமையில், செயலாளர் சிவனேஸ்வர மணிச்செல்வன், பொருளாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆசிரியர்கள் போடி உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
No comments:
Post a Comment