Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 1 May 2014

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து: பல்கலை. துணை வேந்தர் எச்சரிக்கை


சென்னை பல்கலைக் கழகத்தின் 2013ம் ஆண்டுக்கான துணை பட்டமளிப்பு நிகழ்வு, செனட் அரங்கில் நேற்று நடந்தது. சட்டம், மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவியல், மேலாண்மை அறிவியல், வணிகவியல், கற்பித்தல், கலை ஆகியவற்றில் ஆய்வுப் படிப்புகளை முடித்த 196 மாணவர்களுக்கு துணை வேந்தர் தாண்டவன் பட்டங்களை வழங்கினார். இது தவிர பல்வேறு நிலைகளில் பட்டப்படிப்புகளை முடித்த 12 ஆயிரத்து 378 பேர் நேரடியாக கலந்து கொள்ளாமல் பட்டம் பெறுகின்றனர். 

பின்னர் துணை வேந்தர் தாண்டவன் அளித்த பேட்டி: இந்த ஆண்டு புதிதாக 5 பாடப்பிரிவுகள் தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த பாடப்பிரிவுகள் பல்கலை உறுப்பு கல்லூரிகளுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும். அந்த பிரிவுகளில் முதுநிலை மற்றும் எம்பில் படிப்புகளும் தொடங்கும் திட்டம் உள்ளது. அனேகமாக அவை அடுத்த ஆண்டு தொடக்கப்படும். உலக அளவில் இப்போது பெண்களுக்கான படிப்பு பிரபலமாகி வருகின்ற நிலையில், இந்தியாவில் சென்னை பல்கலைக் கழகத்தில் அந்த படிப்பு தொடங்குவதற்கான முயற்சிகள் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. 

தேசிய அங்கீகாரம் வழங்கும் கழகம் தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளின் தரம் குறித்து ஒரு ஆய்வு அறிக்கையை கொடுத்துள்ளது. தேசிய அங்கீகார கழக நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு அதை முழுமையாக படித்துப் பார்க்க சொல்லியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களை சென்னை பல்கலைக் கழகம் பூர்த்தி செய்யும். இன்டர்நெட் மூலம் கற்பிக்கும் முறை மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் தொடங்கப்படும்.

கலை அறிவியல் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வாங்குவதாக புகார் வந்தால் அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துணை வேந்தர் தாண்டவன் கூறினார்.

No comments:

Post a Comment