Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 26 June 2014

ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ் மார்க்’ அரசாணையை ரத்து செய்ய ஐகோர்ட்டில் மனுதாக்கல்


புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகர். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, எம்எட் முடித்துள்ளேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளேன். கடந்தாண்டு நடந்த டிஇடி தேர்வில் 84 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கல்வித்துறையின் சார்பில் கடந்த மே 30ம் தேதி அரசாணை எண் ‘71’ வெளியிடப்பட்டது. அதில், டிஇடி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு 100 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2விற்கு 10, டிகிரிக்கு 10, பிஎட் 15 என தனித்தனியாக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறையால் 10 ஆண்டுக்கு முன் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். 

இதே போல் டிகிரி பாடத்திட்டமும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் மாறுபடுகிறது. தன்னாட்சி கல்லு£ரிகளிலும் பாடத்திட்ட முறை மாறுபடுகிறது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி ரவிசந்திரபாபு விசாரித்தார். மனு குறித்து பதில் அளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தொடக்ககல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment