Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 30 June 2014

2013 - 2014ஆம் கல்வியாண்டில் 20500 காலிப் பணியிடங்கள்?


வரலாற்று சாதனை படைத்திருக்கிறது TRB.கடந்த 2013 லிருந்து ஒரே நிறுவனம் அல்லது வாரியத்தின் மீது அதிக வழக்குகள் தொடரப் பட்ட பெருமைக்குரிய வாரியம் "TRB" என்ற சாதனையை படைத்திற்குக்கிறது. இந்த மதிப்பிற்குரிய சாதனையை லிம்கா, கின்னஸ், போன்ற உலக வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதோடு சென்னையின் முக்கிய இடங்களிலும் ,ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா நகரங்களிலும் TRB சாதனையை பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டும்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டில் உள்ள கல்வி முறை ,விவசாயம், பொருள் உற்பத்தி போன்றவற்றை தான் சார்ந்துள்ளது. விவசாயம் குறித்த எந்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கையும் இல்லை. நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு அரசின் அறிவுறுத்தல் இல்லை.விளைவு நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.நட்ட பயிர்கள் யாவும் நாசமாய் போய்விட்டது. AK 47 முதல் PK 57 வரை தொழிற்சாலையில் அவர்கள் எதை வேண்டுமானால் தயாரிக்கலாம்.ஆனால் மனிதன் உயிர் வாழத் தேவையான ஒரே ஒரு நெல் மணியைக் கூட அவர்களால் தயாரிக்க முடியாது. உலக மயமாக்கல் என்ற பெயரில் அயல் நாட்டு தொழிற்சாலைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.அவர்கள் தேவையான அளவு நம்மை சுரண்டிவிட்டு தங்களது மூட்டை முடிச்சிகளுடன் தங்கள் நாட்டிற்கு திரும்பி விடுகின்றனர்.உதாரணம். சென்னையில் இயங்கும் நோக்கியா தொழிற்சாலை. சரி நம் துறைக்கு வருவோம்.2009 ஆண்டு ஒபாமா அமெரிக்காவின் அதிபரான போது அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர் செய்ய பல நடவடிக்கை எடுத்தாலும் முக்கியமாக குறிப்பிட வேண்டிய நடவடிக்கை அங்கு வேலை செய்த இந்தியர்களில் 50% இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப் பட்டனர். அமெரிக்காவின் பொருளாராதரத்தை சீர் செய்ய வேண்டுமானால் அமெரிக்க குடி மக்களுக்கு வேலை வழங்க வேண்டும்.இந்தியர்கள் பலர் அமெரிக்கா மக்களின் வேலையை பறித்து விடுகின்றனர் என்ற காராணம் சொல்லப் பட்டது .அதோடு இந்தியாவின் IT நகராமான பெங்களூருக்கு வழங்கி வந்த project இன் அளவு சரி பாதியாக குறைக்கப் பட்டது.இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒபாமாவிற்கு அவரது நாட்டு மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்தது.நாடு முன்னேற வேண்டுமென்ற துடிப்பு இருக்கிறது . ஆனால் இந்தியாவிலோ அதற்கு நேர் தலைகீழ்.அரசியல்வாதிகள் தம் சொந்த நாட்டு மக்களை அடிமைகளாகவும் முட்டாள்களாகவும் வைத்திருக்கவே விரும்புகின்றனர்.நேருவிற்கு பிறகு பாராளுமன்றத்திலும், காமராஜருக்குப் பிறகு தமிழக சட்ட மன்றத்திலும் திறமையான அமைச்சர்களை நியமித்துக் கொள்வதில்லை. TET குறித்து இதுவரை நூற்றுக் கணக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளது.தொடர்ந்து பதியப்பட்டும் வருகிறது.5% தளர்விற்கு எதிராக,சீனியாரிடிக்கு மதிப்பெண் அளிக்கப் படவேண்டும், +12 மதிப்பெண்ணை நீக்க வேண்டும் என ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமான முறை இதுதான் என நினைத்துக் கொண்டு வழக்குப் பதிகின்றனர். ஆனால் நிரப்படும் காலிப் பணியிடங்களின்எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியாமலே வழக்கு பதிவு செய்வதுதான்உலக மகா காமெடி. ஒருவேளை அவர்கள் குறிப்பிடும் அதே முறை G.O வாக வந்தாலும் அவர்களது போட்டியாளர்கள் மாறுவார்களே தவிர, காலிப் பணியிடங்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 100% வேலை கிடைக்கும் எனற உத்தரவாதம் இல்லை. RTI மற்றும் இன்னும் பிற தகவல்களை ஒப்பிட்டு பார்க்கையில் படி BT க்கு 10800 பணியிடங்கள் நிரப்பப் போவதாக தெரிகிறது.ஆனால் இது அதிகாரப் பூர்வத் தகவல் இல்லை .ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் SC,ST பிரிவினரைத் தவிர பிற பிரிவினர்களும்,82-89 பெற்றவர்களும் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள். ஏனெனில் இந்த 10800 பணியிடங்களும் ஏற்கனவே இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பிரித்து வைக்கப் பட்டுள்ளதாகாவும்.அதில் SC,ST பிரிவினருக்கே அதிக காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன? இப்போது நிரப்பப் போகும் இந்த 10,800 பணியிடங்கள் எப்படி வந்தது என்று கேட்டால், MAY 2013 ஆம் ஆண்டு வரை காலிப் பணியிடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டதாகவும் அதில் மொத்தமுள்ள 30,800 பணியிடங்களில் 20,000 பணியிடங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கி விட்டதாகவும் மீதமுள்ள 10,800 பணியிடங்கள் 2013 ஆம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்ற நம்மைக் கொண்டு நிரப்பப் போவதாகவும் தெரிகிறது. 2012 ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2013-MAY வரை உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பினால் 2013 ஆண்டில் தேர்ச்சி பெற்ற நமக்கு 2014-MAY வரை உள்ள காலிப் பணியிடங்களைக் கணக்கில் எடுதுத்துக் கொண்டு பணி ஆணை வழங்க வேண்டும்.வரும் ஜூலை 10 முதல் சட்ட மன்ற கூட்டத் தொடர் நடைபெறவிருக்கிறது.அப்போது கல்வி மானியக் கோரிக்கையின் போது உண்மை நிலவரம் தெரிந்து விடும். உண்மையில் அரசும் TET 2013 தேர்வு முடிவு வெளியானது முதல் இந்நாள் வரை ஏற்பட்ட குழப்பத்திற்கு பரிகாரம் செய்யும் விதமாகவும்,82-89 பெற்றவர்களும் உண்மையாக பயனடைய வேண்டும் என்று நினைத்தால் 2014-MAY வரை உள்ள காலிப் பணியிடங்களையும் கணக்கில் சேர்த்து TET-2013 க்கு முற்று புள்ளி வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. ஒருவேளை 10800 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுமானால் அதிலுள்ள அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வழக்குத் தொடுக்கும் அன்பர்களே, இதுதான் நமக்கு சாதகமான weighatge முறை என நினைத்துக் கொண்டு,தான் குறிப்பிடும் முறையிலேயே weighatge முறை கணக்கிட வேண்டும் என வழக்குத் தொடராமல், TET- 2012 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு MAY-2013 வரையுள்ள காலிப் பணியிடங்களை கணக்கில் கொண்டு நிரப்பப் படும் போது TET-2013 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு MAY-2014 வரை உள்ள காலிப் பணியிடங்களும் கணக்கில் எடுத்துக் கொண்டு பணி ஆணை வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடருங்கள். 2013-2014 ஆம் கல்வி ஆண்டில் 20500 காலிப் பணியிடங்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது .ஆதலால் நாம் அனைவரும் பயனடையலாம்.

No comments:

Post a Comment