பிளஸ்2 மாணவர்கள் இன்று இறுதி நாளாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு எழுதுகின்றனர். இம்மாணவர்களுக்கு வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் 'கருப்பு அல்லது நீல நிற, 'பால் பாய்ன்ட்' பேனா பயன்படுத்துமாறு, அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தேவராஜன் அறிவுறுத்தியுள்ளார்.மாநிலம் முழுவதும், கடந்த மார்ச் 3ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வுகள் நடந்துவருகிறது; இன்று நிறைவடைகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடந்துவருகிறது.கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் 75 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கவேண்டும். மீதம் உள்ள 75 மதிப்பெண்களுக்கு விடைத்தாளில் பிற கேள்விகளுக்கு பதில் எழுதவேண்டும். 50 மதிப்பெண்கள் செய்முறை தேர்வுக்காக ஒதுக்கப்படுகிறது.கடந்த கல்வியாண்டுகளில், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் எச்.பி பென்சில் பயன்படுத்தி, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடை, மாணவர்களால் தேர்வு செய்து நிரப்பப்பட்டு வந்தது. ஓ.எம்.ஆர்., கம்ப்யூட்டரில் நேரடியாக பதிவு செய்து மதிப்பெண் வழங்கும்பொழுது, பென்சிலில் நிரப்பப்படும் சில பதிவுகள் விடுபடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.இதனால், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கருப்பு அல்லது நீல நிற 'பால் பாய்ன்ட் பேனா' பயன்படுத்த அரசு தேர்வுத்துறையால் அறிவுறுத்தப்பட்டது. தகவல்கள் அனைத்து மாணவர்களுக்கும் சென்று சேராத நிலையில், 'பால் பாய்ன்ட் பேனா' இல்லாத மாணவர்கள் பென்சில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு, முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்க, அனைத்து முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு கடந்த 22ம் தேதி சுற்றறிக்கையின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment