Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 26 March 2014

கல்வியில் பின் தங்கிய 9 மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு: விசாரணைக்கு பின் அனுமதி


சிவகங்கையில் அரசு உதவி பெறும் பள்ளியில், 10-ம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்கள் விசாரணைக்குப் பின் தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் இன்று தொடங்கின. இன்று காலை, சிவகங்கையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதச் சென்றனர். அவர்களில், 9 மாணவர்களுக்கு மட்டும் ஹால் டிக்கெட் வழங்கப்படாத நிலையில், 3 பேர் தேர்வு எழுதாமல் வீட்டிற்குத் திரும்பிவிட்டனர்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டும், உரிய பதில் கிடைக்காததால், மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். பின்னர், 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு, அங்கிருந்த 6 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
பொதுத் தேர்வில், பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக, கல்வியில் பின் தங்கிய 9 மாணவர்களுக்கும் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை மறுத்துள்ள பள்ளி நிர்வாகம், மாணவர்கள் சரியாக பள்ளிக்கு வராததால் தான் அவர்களின் ஹால் டிக்கெட்டுக்கு விண்ணப்பிக்கவில்லை என விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment