Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 27 March 2014

பாலியல் தொந்தரவு மீது நடவடிக்கை எடுக்காத அரசுப்பள்ளி தலைமையாசிரியை 'சஸ்பெண்ட்'

மாணவியர் கூறிய பாலியல் தொந்தரவு மீது நடவடிக்கை எடுக்காத அரசுப்பள்ளி தலைமையாசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை, மேலவெள்ளுர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவியரை, ஓவிய ஆசிரியர் ஞானஉதயம், 45, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கடந்த பிப்., 16ல், புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதில், ஆசிரியருக்கு ஆதரவாக, பள்ளி தலைமையாசிரியை சீதா செயல்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவியரை, மிரட்டியதாக புகார் எழுந்தது. ஞானஉதயம் மற்றும் தலைமையாசிரியை மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில், தலைமையாசிரியை சீதாவை, கல்வித்துறை, சஸ்பெண்ட் செய்து, நேற்று உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment