Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 27 March 2014

10ம் வகுப்பு தமிழ் முதல்தாளில் எழுத்து பிழை: மாணவர்கள் அதிர்ச்சி

நேற்று நடந்த, பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாளில், எழுத்துப்பிழை இருந்ததால், மாணவர்கள் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர். தமிழகத்தில், 10 வகுப்பு பொதுத்தேர்வு நேற்று நடந்தது. முதன்முதலாக பொதுத்தேர்வை சந்திக்கும் பதட்டத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு, முதல் தேர்விலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தமிழ் முதல்தாள் தேர்வில், 26வது கேள்வியாக கேட்கப்பட்ட, "வேந்தற்குரிய பொருள் யாது' என்ற கேள்வியில், "வேந்தர்க்குரிய' என அச்சிடப்பட்டிருந்தது. அதே போல், 49, இ கேள்வியில், "மீள் நோக்கும்' எனத்தொடங்கும் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் என கேட்பதற்கு பதிலாக, "மீன் நோக்கும்' என அச்சிடப்பட்டிருந்தது. தமிழ் முதல்தாளில் இருந்த அச்சுப்பிழை காரணமாக, மாணவ, மாணவியர் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ் பாட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
தமிழ் பாடத்தில் ஒரு எழுத்து மாறினாலும், அதன் பொருள் மாறிவிடும். மீள் நோக்கும் என்பதற்கு பதில், மீன் நோக்கும் என, கேள்வி கேட்கப்பட்டுள்ளதால், அதன் அர்த்தமும், பொருளுமே மாறிவிட்டது. பாடல் வரி மீள் நோக்கும் என தொடங்கும் என, மாணவர்களுக்கு தெரிந்திருந்தும், வினாத்தாளில் மீன் என கொடுக்கப்பட்டதால், அதை வைத்து சிலர் முழு பாடலையும், மீன் நோக்கும் என மாற்றி எழுதி வைத்துள்ளனர். முதன்முதலாய் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு கேள்விகளுக்கும், மாணவர்கள் மாற்றி எழுதியிருந்தாலும், மதிப்பெண் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். முதல் தேர்விலேயே, குழப்பம் ஏற்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

No comments:

Post a Comment