Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 26 March 2014

மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வு முடிவு வெளியிடும் தேதி ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகே முடிவு செய்யப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயோ-கெமிஸ்ட்ரி பாடத்துடன் பிளஸ் 2 தேர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) நிறைவடைந்தது. இதில் காப்பியடித்ததாக மாநிலம் முழுவதும் 3 பேர் பிடிபட்டனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,242 தேர்வு மையங்களில் 8.26 லட்சம் மாணவர்கள் பள்ளிகளின் மூலமாக தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 53 ஆயிரம் பேர் எழுதினர்.
பிளஸ் 2 விடைத்தாள்கள் 66 மையங்களில் மார்ச் 21 முதல் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியப்
பாடங்களுக்கான விடைத்தாள்கள் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பாக தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியது:
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஆண்டைப் போலவே ஏறத்தாழ அதே கால அட்டவணையில் நடைபெறுகின்றன. விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 15 அல்லது 16 தேதியில் நிறைவடையும் என
எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு, விடைத்தாள் திருத்தும் மையங்களிலிருந்து மதிப்பெண்களைப் பெறுவதற்கு ஏப்ரல் 20-ஆம் தேதி வரை ஆகும். அதன் பிறகே, தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி முடிவு செய்யப்படும்.
கடந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதி வாக்கிலேயே இந்த ஆண்டும் தேர்வு முடிவுகளை வெளியிட வாய்ப்புள்ளது என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு பிளஸ் 2
தேர்வு முடிவு மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விடைத்தாள்களில் ரகசிய பார் கோடு எண்ணில்தான் மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கும் என்பதால், அந்த ரகசிய எண்ணுக்கு உரிய பதிவு எண் கம்ப்யூட்டர் மூலம் கண்டறியப்படும். அந்த மதிப்பெண்ணைச்
சரிபார்க்கவும் இந்த ஆண்டு கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
180 மாணவர்கள் மட்டுமே பிடிபட்டனர்: விடைத்தாள் புத்தகப் பக்கங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட மாற்றங்களால் தேர்வறைகளில் நடைபெறும் முறைகேடுகள் பாதியாகக் குறைந்துவிட்டன. இந்த ஆண்டு
பிளஸ் 2 தேர்வில் காப்பியடித்ததாக மொத்தமாக 180 மாணவர்கள் மட்டுமே பிடிபட்டனர். கடந்த ஆண்டு 397 மாணவர்கள் காப்பியடித்ததாகப் பிடிபட்டனர்.
விடைத்தாள்கள்: தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை எடுத்துச் செல்லவும், தேர்வுக்குப் பிறகு விடைத்தாள்களை எடுத்து வரவும் இந்த ஆண்டு புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டது.
விடைத்தாள்கள் தொலைவதைத் தடுக்க, அரசால் பிரத்யேகமாக வாகனங்கள் அமர்த்தப்பட்டு மாவட்டங்களில் இருந்தே மையங்களுக்கு விடைத்தாள்கள் எடுத்துச்செல்லப்பட்டன. இந்த ஆண்டு எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாமல் விடைத்தாள்கள் பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டன.

No comments:

Post a Comment