Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 26 March 2014

மாற்றியமைக்கப்பட்ட நேரத்தின் படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
மாற்றியமைக்கப்பட்ட நேரத்தின் படி தேர்வுகள் நடைபெற்றன.
அதன் படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு 12 மணிக்கு நிறைவடைந்தது. முன்னதாக வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடங்களும், விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் புகைப்படம், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்க 5 நிமிடங்களும் மாணவ, மாணவியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இன்றைய மொழிப்பாட தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம், 3 ஆயிரத்து 131 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்றது.‌தேர்வு முறைகேட்டை தடுக்கும் பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு போல் விடைத்தாள்கள், தொலைந்து போகாமல் இருக்க முதல் முறையாக வினா மாற்று விடைத்தாள் பாதுகாப்பிற்காக வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment