Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 26 March 2014

தேர்வு முன்னதாக துவங்கியதை வரவேற்கிறோம்; தேர்வு எளிதாக இருந்தது : 10ம் வகுப்பு மாணவர்கள்


தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று காலை துவங்கியது. தேர்வு வழக்கத்தை விட அரை மணி நேரம் முன்னதாக துவங்கியதை வரவேற்பதாகவும், தமிழ் முதல்தாள் தேர்வு எளிமையாக இருந்ததாகவும் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்வு வழக்கத்தை விட அரை மணி நேரம் முன்னதாகத் துவங்கியதால், எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காலையில் வெயில் துவங்குவதற்கு முன்னதாக பள்ளிக்குச் சென்றுவிட்டதால் நிம்மதியாகவே உணர்ந்தோம்.

அதே போல கேள்வித் தாளை படிக்கவும், விடைத் தாளை பூர்த்தி செய்யவும் நேரங்கள் ஒதுக்கியது மிகுந்த பயனை அளித்தது.நிம்மதியாக தேர்வெழுதினோம்.

தமிழ் முதல் தாளில் செய்யுள், உரைநடை ரெண்டும் சரியான அளவில் கேள்விகள் கேட்கப்பட்டதால் வினாத்தாள் எளிமையாகவே இருந்தது என்று மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment