மத்திய பிரதேசத்தில் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிபிஎஸ்இ இயற்பியல் வினத்தாள் போபால் அருகில் உள்ள குவாலியா விதிஷா ஆகிய மாவடங்களில் வினாத்தாள் கசிந்ததாக பள்ளி கல்வி துறைக்கு தகவல் வந்தது.தகவலின் பேரில் உரிய விசாரணை நடத்த மத்திய பிரதேச கல்வி வாரியத்திற்க்கு பள்ளி கல்விதுறை அமைச்சர் பரஸ் ஜெயின் உத்தரவிட்டார்.
வினாத்தாள் வெளியானது குறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கல்வி துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் வினாத்தாள் வெளியானது பற்றி விசாரனை நடத்த மேல்நிலை கல்வி வாரியத்திற்க்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
வினாத்தாள் ரூ300க்கு விற்பனை செய்யபட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இதை தொடரந்து +2 இயற்பியல் தேர்வு அடுத்த மாதம் ஏப்பரல் 12-ந்தேதிக்கு ஒத்தி வைக்கபட்டுள்ளதாக மத்திய பிரதேச கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து தீவிர விசாரணை நடத்தபடும் என்று கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment