Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 26 March 2014

கற்றல் திறனை சோதிக்க தேசிய அளவில் தேர்வு; ஏப்ரல் 10-ல் தொடக்கம்

மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் வகையில், தமிழகத்தில், ஐந்தாம் வகுப்பு மாணர்களுக்குரிய தேசிய அடைவுத்திறன், ஏப்ரல் 10,11, 15,16 ஆகிய தேதிகளில் நடத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் திட்டமிட்டுள்ளது.பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாடத்திட்டத்தை வடிவமைக்கவும் முன்னேற்பாடாக, தேசிய அளவில், அடைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், ஐந்தாம் வகுப்பு, மாணவர்கள் கற்றலில், அடைந்த திறன் குறித்து, தமிழ், கணிதம், சூழ்நிலையியல், பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு மாணவர், இரண்டு பாடத்தில் தேர்வெழுத வேண்டும். அதுமட்டுமன்றி, பள்ளி, ஆசிரியர், மாணவர் விபரங்களையும், அதற்கு என வழங்கப்பட்ட படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, வேலூர், தர்மபுரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 15 மாவட்டங்களில், 275 பள்ளிகளில் இந்த அடைவுத்திறன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால், ஏப்ரல் 10,11,15,16 ஆகிய தேதிகளில், நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment