Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday 13 September 2014

49 தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு


அரசுப் பள்ளிகளின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 49 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை புதன்கிழமை பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் அளவிலான மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் என 120-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்தப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு தேர்வுப் பட்டியலில் இருந்த தலைமையாசிரியர்களுக்கு ஆகஸ்ட் இறுதியில் மாவட்டக் கல்வி அலுவலர் பயிற்சியும் வழங்கப்பட்டது.

ஆனால், தலைமையாசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஆவதாகப் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், பதவி உயர்வுக்கான தேர்வுப் பட்டியலில் இருந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 49 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்ற காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை

1. கே.பாஸ்கர் ராவ் அரசு உயர்நிலைப் பள்ளி, முருக்கம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், சென்னை.

2. எம்.ஜி. கந்தசாமி (அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, அத்திமாஞ்சேரிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம்) மாவட்டக் கல்வி அலுவலர், தென் சென்னை.

3. ஆர்.சுரேஷாதேவி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஏகனாம்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் உதவி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை.

4. தி.மலர்விழி அரசு மேல்நிலைப் பள்ளி, சோமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருவள்ளூர்.

5. பி.ராஜகோபால் அரசு உயர்நிலைப் பள்ளி, மாகாண்யம், காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், வடசென்னை.

6. பி.ஆர்.விஜயலட்சுமி அரசு உயர்நிலைப் பள்ளி, ஏமப்பூர், விழுப்புரம் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம்.

7. க.நாகராஜ் மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (கிழக்கு).

8. இ.அருள்பிரகாசம் அரசு உயர்நிலைப் பள்ளி, சி.அரசூர் அஞ்சல், கடலூர் மாவட்டம் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை.

ஓய்வு பெற்றவருக்கு பதவி உயர்வு:

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக இருந்த சொ.ரவி என்பவர் கடந்த மார்ச் மாதத்திலேயே பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில், பதவி உயர்வுப் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்படாததால் அவருக்கு மாவட்டக் கல்வி அலுவலராக இப்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை இந்த கவனக் குறைவைத் தவிர்த்திருக்கலாம் என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment