Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday 13 September 2014

காலாண்டு தேர்வுகளை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு


பிளஸ்-2 காலாண்டு தேர்வு வருகிற 15-ம் தேதி தொடங்கி 26-ந் தேதி வரையும், எஸ்எஸ்எல்சி காலாண்டு தேர்வு 17-ல் ஆரம்பித்து 29-ந் தேதி வரையும் நடைபெற உள்ளன. 
10, 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வுகளை ஆய்வு செய்ய 5 இணை இயக்குநர்கள் தலைமை யில் கண்காணிப்பு குழுக்களை பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அமைத் துள்ளார். வினாத்தாள் காப்பக மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? எவ்வித புகாருக்கும் இடமின்றி தேர்வுகள் நடக்கின்றதா? என்பதை ஆய்வு செய்வர். 
ஒவ்வொரு இணை இயக்கு நருக்கும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் வருமாறு- 
1. இணை இயக்குநர் (பணி யாளர்) ஏ.கருப்பசாமி - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, விழுப்புரம், கடலூர் 
2. இணை இயக்குநர் (இடை நிலைக்கல்வி) எம்.பழனிச்சாமி - கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி 
3. இணை இயக்குநர் (தொழில்கல்வி) தர்ம.ராஜேந்திரன் - வேலூர், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி 
4. இணை இயக்குநர் (மேல் நிலைக்கல்வி) வி.பாலமுருகன் - சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கரூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர் 
5. இணை இயக்குநர் (என்.எஸ்.எஸ்.) சி.உஷாராணி - பெரம்பலூர், அரியலூர், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்.

No comments:

Post a Comment