Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 6 November 2013

13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு ?

நேற்று வெளியிடப்பட்ட தகுதித்தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து சுமார் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவுசெய்துள்ளது.இதற்காக பாடவாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணிநடந்து ஏற்கனவே முடிந்துள்ளது.
13 ஆயிரம்இடங்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரிஆசிரியர்களுக்கும் கடந்த ஆகஸ்ட்17, 18 ஆகியதேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்திய இந்ததகுதித்தேர்வை ஆறரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்..

தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது

இந்ததகுதித்தேர்வு மூலம்13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவு செய்துள்ளது.இதில் பட்டதாரி ஆசிரியர்பணி இடங்கள் மட்டும்10 ஆயிரம் அடங்கும்.மீதமுள்ள 3 ஆயிரம் இடங்கள் இடைநிலை ஆசிரியர்பணியிடங்கள் ஆகும்.

பாடவாரியாக கணக்கெடுப்பு


பட்டதாரிஆசிரியர்,இடைநிலைஆசிரியர்பணியிடங்கள் குறித்தவிவரங்கள் பள்ளிக்கல்வித்துறை,தொடக்கக்கல்வித்துறை,ஆதிதிராவிடர்நலத்துறை,நகராட்சி பள்ளிகள்,சென்னை மாநகராட்சி,கோவை மாநகராட்சி என பல்வேறு துறைகளில் இருந்து வந்துள்ளன.பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாகவும்,துறைவாரியாகவும்கணக்கெடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment