Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 24 November 2013

நாகையில் கல்வித்தரம் மோசம்: கலெக்டர் வேதனை

"நாகை மாவட்டத்தில் கல்வித்தரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது வருத்தமளிக்கிறது; கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்" என கலெக்டர் முனுசாமி பேசினார்.

பள்ளிக் கல்வித்துறை மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, நாகையில் நடந்தது. கண்காட்சியை துவக்கி வைத்து கலெக்டர் முனுசாமி பேசியதாவது:

அறிவியல் வளர்ச்சி என்பது நாட்டின் வளர்ச்சி. அறிவியல் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்ட நாடு தான் உலகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. நாகை மாவட்டத்தின் கல்வித் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மாநிலத்தின் 32 மாவட்டங்களில், 28 வது இடத்தில் நாகை உள்ளது வருத்தமளிக்கிறது.

கல்வித் தரத்தின் நிலை உயர ஆசிரியர்கள் கடும் முயற்சி எடுக்க வேண்டும். ஒரு மாணவனின் எதிர்காலம் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சியில்தான் உள்ளது. ஆசிரியர்கள் மீது அரசு நல்ல மரியாதை வைத்துள்ளது. பள்ளிகளில் வசதி குறைபாடு இருந்தால் கூறுங்கள், உடன ரி செய்கிறோம். அல்லது ஆசிரியர்களுக்கு என்ன பிரச்னை என கூறுங்கள். பிரச்னை எதுவாக இருந்தாலும் அரசு பார்த்துக் கொள்ளும்.

மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்கள் கையில் உள்ளது. ஆசிரியர்கள் கடுமையாக உழைக்காவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் சூன்யம் ஆகிவிடும். இவ்வாறு கலெக்டர் முனுசாமி பேசினார்.

No comments:

Post a Comment