Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 14 November 2013

அவ்வையார் எத்தனை பேர்? : ஆசிரியர் குழுவை விசாரிக்க முடிவு

அவ்வையார் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு, விடை தேடும் பணியில், பள்ளி கல்வித்துறை இறங்கியுள்ளது.
ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தை எழுதிய ஆசிரியர் குழுவை, விரைவில் அழைத்து விவாதிக்க, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. பள்ளி கல்வித் துறை வெளியிட்ட, ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில், அவ்வையார் இருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக, அவ்வையார் ஒருவரே என பொருள்படும் வகையில், புத்தகங்களில் தகவலை தெரிவித்த கல்வித்துறை திடீரென இப்போது இருவர் என தெரிவித்திருப்பது ஏன் என்றும், இது பெற்றோர், மாணவர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது குறித்தும் தினமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.
இதையடுத்து, கல்வித் துறை, அவ்வையார் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு விடை தேடும் வேலையில், இறங்கி உள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் தீர்க்கமான, இறுதியான கருத்துக்கள் என முடிவு செய்யப்பட்டவை மட்டுமே பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும். சந்தேகத்திற்கு இடமான கருத்துக்கள் பாட புத்தகங்களில் இடம்பெறக் கூடாது. இது மாணவர் மத்தியில், தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.
அவ்வையார் இருவர் தான் என எப்படி, பாட புத்தகத்தில் இடம்பெற்றது என தெரியவில்லை. ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தை எழுதிய ஆசிரியர் குழுவை விரைவில் அழைத்து அவ்வையார் விவகாரம் குறித்து விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து, விரிவாக ஆய்வு செய்து, உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முதற்கட்ட நடவடிக்கையாக, அடுத்த ஆண்டு, ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவ பாட புத்தகத்தில் அவ்வையார் குறித்த தகவல்கள் நீக்கப்படலாம்.

No comments:

Post a Comment