சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் இந்த கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு பயிலும் 6,106 மாணவர்களுக்கும், 10-ஆம் வகுப்பு பயிலும் 8,491 மாணவர்களுக்கும் சிறப்பு கற்றல் கையேடுகள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்து 20 மாணவர்களுக்கு கையேடுகள் வழங்கினார்.
இந்த பாடங்களுக்கான கையேடுகள் அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். இந்த கையேடுகள், மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வி வல்லுநர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment