Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 18 November 2013

சி.பி.எஸ்.இ., தேர்வுகள் முன்கூட்டியே வராது: CBSE தலைவர் வினீத் ஜோஷி

 சி.பி.எஸ்.இ., வாரியத்தின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு தேதிகள், எப்போதும் போலவே, 2014ம் ஆண்டு மார்ச் 1ம் தேதிதான் என்றும், தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புகள் இல்லை என்றும், CBSE தலைவர் வினீத் ஜோஷி கூறியுள்ளார்.
அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, பெற்றோர்களிடமிருந்து வந்த இதுதொடர்பான கணக்கற்ற கேள்விகளையடுத்து, அவர் இந்த வெளிப்படையான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான நிறைவுத்தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு, அதற்கு முந்தைய ஆண்டின் டிசம்பர் 3 அல்லது 4வது வாரத்தில் வெளியாவது வழக்கம். அதுபோலவே, இந்தாண்டும் நடைபெறும்.
ஒவ்வொரு மாநில தேர்தல் ஆணையங்களுக்கும், CBSE தேர்வுகளின் தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment