















EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம் செய்ய அதிகம்
நேரம் செலவாகிறது. போட்டோஷாப் மென்பொருளில் இதை எளிமையாகச் செய்ய ஒரு வசதி இருக்கிறது. முதலில் டெஸ்க்டாப்பில் EMIS, EMIS RESIZE என இரண்டு போல்டர்களை உருவாக்கிக் கொள்ளவும். EMIS எனும் போல்டரில் மாற்றம் செய்யப்பட வேண்டிய போட்டோக்களை வைத்துக் கொள்ளவும். போட்டோஷாப்பை ஓப்பன்
செய்து அதில் உள்ள
OPEN வழியாக EMIS போல்டரில் உள்ள ஏதேனும் ஒரு போட்டோவைத் திறக்கவும். பின்பு Windows மெனுவில் Actions என்பதை தேர்ந்தெடுக்கவும். கீழே ஐந்தாவதாக வரும் create new action என்பதை தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய New action க்கு RESIZE எனப் பெயர் கொடுக்கவும். பின்பு Record பட்டனை அழுத்தவும். பின்பு Image மெனுவில் Image size என்பதை
தேர்ந்தெடுக்கவும். Constrain Proportions என்பதில் உள்ள டிக்கை
எடுத்து விடவும். Width,Height,Resolution ஆகியவற்றை 200க்கு செட் செய்து கொள்ளவும். பின்பு Save As கொடுத்து EMIS RESIZE என்ற டெஸ்க்டாப் போல்டரில் அதை சேமிக்கவும்.பின்பு Stop playing /recording என்பதை கிளிக்
செய்து உங்களுடைய action நிறுத்தவும். அவ்வளவுதான் 99 சதவீத வேலையை நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்! இனிமேல் File மெனுவில் Automate இல் Batch பட்டனை கிளிக் செய்து Action இல் RESIZE என்பதை செலக்ட் செய்து
உங்களுக்கு தேவையான EMIS போல்டரை செலக்ட் செய்து ஓ.கே கொடுத்தால் ஒரு சில நிமிடங்களில் உங்கள் அனைத்து படங்களும் EMIS RESIZE என்ற போல்டரில் தேவையான படிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கும்!
நன்றி: நண்பர் திரு அசதா அவர்களின் வழிகாட்டுதலுக்கு!
No comments:
Post a Comment