Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 18 December 2013

விளையாட்டுக்கு அரசு அறிவித்த 10 கோடி நிதி வந்து சேரவில்லை - பள்ளி மாணவர்கள் சோகம்

 தமிழகம் முழுவதும் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கென விளையாட்டுப் போட்டிகள் நடத்த 10 கோடி நிதி ஒதுக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.இதுகுறித்து பள்ளிகளின் விளையாட்டு துறையினர் கூறுகையில், மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்காக குறுவட்டம், மாவட்டம், மண்டலப் போட்டிகள் வரை நிதியே இல்லாமல் சொந்தப் பணத்திலும், பிறரிடம் வசூலித்தும் நடத்தி முடித்து விட்டோம். அரசு அறிவித்த நிதி வந்து சேரவில்லை. விளையா ட்டுக்கான பொது நிதியும் இல்லை. தனியார் அமைப்புகளை அணுகி நிதி கேட்டாலும், அரசு நிதி அறிவிப்பு செய்துள்ள நிலையில் நாங்கள் எப்படி தரமுடியும் எனக் கேட்கின்றனர். எனவே அடுத்து மாநிலப் போட்டிகளுக்கு மாணவர்களை எப்படி அழைத்துச் செல்வது எனத்தெரியாமல் தவித்து வருகிறோம் என்றனர்.

No comments:

Post a Comment