திருச்சியில் 2011ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மதிப் பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்களுக்கு தங்களது சான்றிதழை பெற்றுக்கொள்ள கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக் டோபர் மாதங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக மையத்தில் தேர்வர்களால் நேரில் பெறப்படாமலும், அஞ்சல் மூலம் அனுப்பி பட்டுவாடா ஆகாமலும் உள்ளன. இவற்றின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் திருச்சி அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
தேர்வு திட்ட விதிமுறைகளின் படி மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் அழிக்கப்படலாம் என்று உள்ளது. எனவே இதுவரை மதிப்பெண் சான்று பெறாத தனித்தேர்வர்களுக்கு தற்போது வழங்கப்படும் வாய்ப்பே இறுதியானதாகும். எனவே, இதைப் பயன்படுத்தி, இதுவரை பெற்றுக்கொள்ளாத தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த மதிப்பெண் சான் றிதழ் பெறுவதற்கு தேர்வெழுதிய பருவம், பாடம், மற் றும் தேர்வு மையத்தின் பெயர் உள்ளிட்ட விவரங் களை குறிப்பிட்டு ரூ.40க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுயமுகவரி எழுதிய உறை ஒன்றுடன் மண்டல துணை இயக்குநர், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம், பழைய கலெக்டர் அலுவ லக வளாகம், திருச்சி என்ற முகவரிக்கு இம்மாதம் 31ம் தேதிக்குள் அனுப்பிவைத்து மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், 2011ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக் டோபர் பருவத்திற்கு பின் தேர்வெழுதிய தனித் தேர்வர்களும் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
இத்தகவலை அரசுத் தேர்வுகள் திருச்சி மண்டல துணை இயக்குநர் சுபத்ரா வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment