பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில்மானியக்குழுவிதிமுறை களைப் பின்பற்றக்கோரி தொடர்பாக வழக்கில் அர சுக்கு நோட்டீஸ் அனுப்பி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் மூன்று பல்கலைக் கழகங் களின் துணைவேந்தர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிக்கத் தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள் ளது.
ஏற்கனவே இவ்வாறு நியமனம் செய் யப்பட்ட மதுரை காமராசர் பல்கலைக் கழ கத் துணைவேந்தர் யு.ஜி.சி. விதிப்படி பத வியில் நீடிக்கத் தகுதியில்லாதவர் என்று சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் மூன்று வழக்குகள் ஓராண்டுக் கும் மேல் நிலுவையில் இருக்கும் நிலை யில் பரபரப்பான இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
தமிழ்நாடு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவ ரான எஸ்.கிருஷ்ணசாமிசென்னைஉயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின்விவரம்:தமிழகத்தின் சில சிறந்த பல்கலைக் கழ கங்களுக்குத் தகுதி இல்லாத சிலர் துணை வேந்தர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட் டுள்ளனர். பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.) விதிமுறைகள் முறையாகப் பின்பற் றப்படாததால் தகுதி இல்லாதவர்கள் துணைவேந்தர்களாகப் பதவி வகித்தனர்.
தற்போது பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கா ரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.கடந்த செப்டம்பர் மாதம் துணைவேந் தரைத் தேர்வு செய்யச் சில விதிகள் நடை முறைப்படுத்தப்பட்டன. அதில் குறிப்பிட்ட கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் இதர சில தகுதிகள் நிறைந்தவர்களைத் துணைவேந் தராக நியமிக்க வேண்டும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
தற்போது துணைவேந்தரைத் தேர்வு செய்ய தேர்வுக்குழு இரண்டு முறைக்கு மேல் கூடி, இறுதிப் பெயர்களை முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்வு யு.ஜி.சி.யின் விதிமுறைகள் 2013-ஐ மீறியுள்ளது.இது தரமான கல்வியை அளிக்கும் விஷயத்தில் பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத் தும்.
அதனால், பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் வெளிப்படையாகவும், சிறந்த கல்வியாளர்களிடம் கலந்து ஆலோசித்தும் நியமிக்கப்பட வேண்டும்.யு.ஜி.சி.யின் விதிமுறைகள் பின்பற்றப்ப டாததால், தற்போது தேர்வுக் குழுவினர் தேர்வு செய்துள்ளவர்களைத் துணைவேந் தர்களாக நியமிக்கத் தடை விதிக்க வேண் டும். யு.ஜி.சி.யின் விதிகளைக் கடுமையாகப் பின்பற்றவும் உத்தரவிட வேண்டும். இவ் வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள், சித்ரா வெங்கட் ராமன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங் கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (நவ. 29) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக் குப் பதிலளிக்குமாறு தமிழக அரசு, யு.ஜி.சி மற்றும்தேர்வுக்குழுவுக்குநோட்ட ீஸ்அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து டிசம்பர் 5-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக் கப்பட்டது.
No comments:
Post a Comment