கோவை மற்றும் ஈரோடு மாவட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவிகள், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:–
2011–13–ம் கல்வி ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பை நாங்கள் முடித்தோம். இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் பட்டய தேர்வு எழுதி உள்ளோம். அதன்பின்னர் ஆகஸ்டு மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் 90–க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளோம்.
இந்தநிலையில் ஆசிரியர் தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்று பல மாதங்கள் ஆனநிலையிலும், தேர்வு முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பதற்குள், தேர்வு முடிவை அறிவித்து, சான்றிதழ் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment