Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 17 December 2013

ஒரே ஆசிரியர் பள்ளிகளில் ஆயிரம் மாணவர்களுக்கு வீணாகும் உடற்கல்வி பாடம்

:மதுரையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், ஒரு உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே இருப்பதால், உடற்கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர், பள்ளிக்கு ஒரு உடற்கல்வி இயக்குனர் என்ற அடிப்படையில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரம் மாணவர்கள் இருந்தால் நான்கு உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குனர் பணியமர்த்தப்பட்டனர். அரசாணை மாற்றப்பட்டு, பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் இருந்தாலும், இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குனர் என்ற முறை கொண்டுவரப்பட்டது. அதன்படிகூட, பெரும்பாலான பள்ளிகளில் உடற்கல்வி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பல பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர்தான் உள்ளார்.
மாணவர்களை ஒழுங்குபடுத்துவது, விளையாட்டு கற்றுத் தருவது, போட்டிகளுக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளைச் செய்வதற்கு, ஆசிரியர்கள் இல்லை. மதுரை மாவட்டத்தில் மொத்தமே 8 உடற்கல்வி இயக்குனர்கள் தான் உள்ளனர். மீதிப் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசுப் பள்ளிகளில் 32, உதவி பெறும் பள்ளிகளில் 39 மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் 18 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
உடற்கல்வி ஆசிரியர் இருந்தால்தான், மாணவர்களுக்கு முறையான உடற்பயிற்சிகளை சொல்லித் தருவார். இல்லாவிட்டால், அதற்கான பாடவேளை வீணாகும். தற்போது அந்த நடைமுறை பின்பற்றப்படுவதால், விளையாட்டின் அவசியத்தை மாணவர்கள் உணரக்கூட முடிவதில்லை. ஒலிம்பிக் போட்டிக்குச் செல்ல வேண்டாம்; உள்ளூர் போட்டிகளில் தயாராவதற்கு கூட பயிற்சி வேண்டுமே. மற்ற பாட ஆசிரியர்களுக்கு தரும் முக்கியத்துவத்தை, உடற்கல்வி பணியிடம் நிரப்புவதிலும் அரசு அக்கறை காட்ட வேண்டும். 




No comments:

Post a Comment