மாவட்டத்தில் கிராமப்புற பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கல்வி மேம்பாட்டுக்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 31.55 லட்சம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையை ஒதுக்கீடு செய்துள்ளனர்.
தமிழகத்தில் மலை மற்றும் கிராமப்புற பகுதிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு உதவிகளை வழங்குகிறது.
இதில் ஒருபகுதியாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கிராமப்புற அரசு பள்ளியில் 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தலா 500 ரூபாயும், 6ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு 1,000 ரூபாய் கல்வி ஊக்கதொகை வழங்குகிறது.
நடப்பாண்டு, ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில், கிராமப்புற பள்ளி மாணவிகளுக்கு 31.55 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. விண்ணப்பித்த 4,436 மாணவிகளுக்கு முதற்கட்டமாக 25.75 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளனர். எஞ்சிய மாணவியர்களுக்கு இரண்டாம் கட்டமாக ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும், மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் சிறுபான்மை பிரிவை சேர்ந்த மாணவர்களில் ஒன்று முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு வரை படிக்கும் 2,764 புதிய மாணவர்களும், ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெறும் 3,119 மாணவர்களும், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் 855 மாணவர்களும், ஏற்கனவே பதிவு செய்த 117 மாணவர்களுமாக 972 பேர் கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கு 3,500 ரூபாய் கல்வி உதவித்தொகை சிறுபான்மை பிரிவு நலத்துறை ஆணையர் அலுவலகம் மூலமாக பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment