திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டில் இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 370 பேரின் விவரங்கள் பதிவு மூப்பு, இனம், முன்னுரிமை, கல்வித்தகுதி ஆகியவை சரிபார்த்தலுக்காக திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரப்பெற்று அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இவர்களில் 52 ஆசிரியர்களுக்கு சரியான பதிவு எண் மற்றும் விவரங்கள் இல்லாததால் அவர்களது விவரங்களை அனுப்பி வைக்க இயலவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியராக பதிவு செய்து ஆசிரியர் தகுதி தேர்வு 2013-ல் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் வருகிற 6-ந் தேதிக்கு முன்னதாக தங்களது பெயரை பட்டியலில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இதில் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக தங்களது ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் சான்று மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இத்துடன் அசல் கல்வி சான்றிதழை நகல் எடுத்து திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment