Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 22 December 2013

மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி


திருச்சி பாலக்கரையில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி பணிமனை நேற்று துவங்கியது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு  ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவில்  உறுப்பினர்களாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டனர். 
இந்நிலையில் பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழுவினருக்கான 2 நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14 மையங்களில் 800 தலைமை ஆசிரியர்களுக்கு பயிந்சி அளிக்கப்பட உள்ளது. 
இதன் துவக்க விழா திருச்சி பாலக்கரை அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது . இங்கு 100 தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் துவக்கி வைத்து பேசியது: 
9 , 10ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை குறைப்பதும் , பள்ளிகளில் கழிவறை, குடிநீர், கட்டிடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதும் தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். திருச்சி மாவட்டத்தில் சில பள்ளிகளை மேம்படுத்த போதுமான இடவசதி இல்லாத நிலை உள்ளது. அது போன்ற பள்ளிகளுக்கு தகுந்த மாற்று இடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆசிரியர்களும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். 
பின்னர் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவர்களின் பொறுப்புகள் குறித்து பயிற்சிகள் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஜமால் நாசர், கருத்தாளர் டாக்டர் சண்முகசுந்தரம், சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேலுசாமி உட்பட கலந்து கொண்டனர்.  இன்றும் பயிற்சி முகாம் நடக்கிறது.

No comments:

Post a Comment