Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 18 December 2013

கல்வி உதவித் தொகை திருச்சி பெல் அழைப்பு

 "கல்வி உதவித் தொகை பெற வரும் ஜனவரி, 17ம் தேதிக்குள் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்' என, திருச்சி பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெல் நிறுவனம் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 1, ப்ளஸ் 2, டிப்ளமோ, ஐ.டி.ஐ., பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள், விதவைகளின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இது குறித்த விபரங்கள், விண்ணப்பம் ஆகியவற்றை www.bhetry.co.in என்ற இணையதள முகவரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, ""பொது மேலாளர் (மனித வளம்), பில்டிங் எண் 24, பெல், திருச்சி - 14'' என்ற முகவரிக்கு வரும் 2014ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களை 0431-2577232, 94431 15695 என்ற போன் நம்பர்களில் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment