உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் இடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் இன்று அந்தந்த மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் நடக்கிறது. தமிழகத்தில் 453 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்று கடந்த மாதம் தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, இன்று ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடத்தி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆண்டுக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங் கடந்த ஜூன் மாதம் சென்னை மற்றும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடந்தது. இதற்காக முன்பே பதவி உயர்வுக்காக, பட்டதாரி ஆசிரியர்களில் பாட வாரியாக பணி மூப்பு பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் தமிழ் மற்றும் தெலுங்கு பாடங்களில் பட்டம் பெற்றிருந்த பணி மூப்பு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களில் யார் பெயர் முதலில் இடம் பெறுவது என்பதில் சர்ச்சை எழுந்தது. தமிழாசிரியர்கள் தங்கள் பெயர்தான் பட்டியலில் முதலில் இடம் பெற வேண்டும் என்றனர். அதற்கு தெலுங்கு மொழி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்னையை அடுத்து இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதனால் 453 உயர்நிலைப் பள்ளிகளில் இன்னும் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது குறித்து 453 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்று கடந்த மாதம் தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, இன்று அந்தந்த மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடத்த பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அந்த மாவட்ட முன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இருந்தபடியே ஆன்லைனில் தலைமை ஆசிரியர் பணிக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
No comments:
Post a Comment