Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 25 December 2013

பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட விபரம்: வாக்காளர் வீட்டிற்கு வருது தபால் தகவல்

 புதிய வாக்காளராக சேர மனுசெய்தவர்களுக்கு, அவர்களது பெயர், பட்டியலில் இடம்பெற்றது குறித்த தகவல், அவரவர் வீட்டிற்கே, தபால் மூலம் அனுப்ப, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 2014 ஜன.,1 ஐ, தகுதி நாளாகக்கொண்டு, 18 வயது நிரம்பியவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட, வாக்காளர் சுருக்கத்திருத்தப்பட்டியல் பணிகள், அக்.,1 முதல் 31 வரை நடந்தன. ஏராளமானோர் மனு செய்தனர். அவர்களின் விபரங்களை சரிபார்க்கும்பணி, இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஜன.,6 ல், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் சார்பில், நேற்று, சென்னையில் இருந்து, வீடியோகான்பரன்சிங் மூலம், ஆலோசனை நடந்தது. அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக , தேர்தல் பிரிவு புரோகிராமர்கள், உதவி புரோகிராமர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், புதிய வாக்காளராக சேர மனுசெய்தவர்களுக்கு, அவர்களது பெயர், பட்டியலில் இடம்பெற்றது குறித்து, வீட்டிற்கே, தபால் மூலம் தகவல் அனுப்ப, முடிவு செய்யப்பட்டது. தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "" சம்பந்தப்பட்டவரது பெயர், வாக்காளர் பட்டியலில் எந்த சட்டசபை தொகுதி , பாகம் எண், வரிசை எண்ணில் இடம் பெற்றுள்ளது எவ்பதை குறிப்பிட்டு, வீட்டு முகவரிக்கு, ஜன.,6க்குப்பின், தபால் அனுப்பப்படும். இப்பணியை, மாவட்ட, தாலுகா தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்பார்வை செய்வர். தேர்தலில் ஓட்டளிப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் ஒருபகுதியாக, இம்முறை கையாளப்படுகிறது,''என்றார்.
Click Here

No comments:

Post a Comment